முன்னாள் ஜனாதிபதி இல்லாமல் தேர்தல் மேடைக்கு அல்லது தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு வருமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தான் சவால் விடுப்பதாக நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பதை எண்ணி மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான காரியாலயம் வெரலுப பகுதியில் நேற்று (07) அமைச்சர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

