ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது தீர்மானத்தை அறிவிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு நடைபெற்ற அக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை வழங்கியிருந்தது.
இதன்படியே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

