ஐக்கிய தேசிய முன்னணியின் மக்கள் பேரணி எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது.
இதில் ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவை வெளிக்காட்டும் சுமார் 3 இலட்சம் மக்களை ஒன்று திரட்டவுள்ளதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் கொழும்பு – காலி முகத்திடலில் பாரிய மக்கள் பேரணி இடம்பெறவுள்ளது. காலி முகத்திடலில் அதிகபட்சம் ஒன்றரை இலட்சம் மக்கள் மாத்திரமே ஒன்றிணைய முடியும். எனினும் எமது பேரணியில் சுமார் 3 இலட்சம் மக்கள் பங்குபற்றவுள்ளனர்.
இதனால், காலி முகத்திடலுடன் அந்த பகுதியிலுள்ள பிரதான வீதியையும் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

