கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இதுகுறித்து விவசாயிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, மழையுடனான காலநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் எலி காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக இதற்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

