வரி செலுத்துவது கௌரவமான செயல் என உள்நாட்டு வருவாய் ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே தெரிவித்துள்ளார்.
புதிய வரி சட்டம் தொடர்பாக மாத்தறை பிரதேசத்தில் வர்த்தகர்களை தெளிவூட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே உள்நாட்டு வருவாய் ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது பொறுப்பு அல்ல எனவும், மாறாக அது ஒரு சமூக கடமை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

