இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இம் மாதம் (3) ஆம் திகதி கொள்ளுபிடியிலுள்ள ஜூம்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய ஆசிர்வாத வழிபாடுகளில் ஈடுபட்ட இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களை சந்தித்த போது தனது கருத்தை தெரிவித்தார்.
இதன் போது ‘இராணுவம் என்பது அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பாக விளங்குகின்றது. நாங்கள் இன மத பேதங்களின்று நாட்டின் இறைமையை பாதுகாக்கின்றோம். எங்கள் வலிமையும் ஒற்றுமையும் ஒரு வல்லமைமிக்க அமைப்பாக உள்ளது. இராணுவத்தில் நீங்கள் எந்த மதத்தை நம்பினாலும், நாங்கள் அனைவரும் ஒரு இலங்கையின் உறுப்பினர்களாகவும், இலங்கையர்களாகவும் ஒன்றாக இருக்கிறோம் ‘ என்று ஊடகங்களுக்கு இராணுவ தளபதி தெரிவித்தார்.
இலங்கை இராணுவ ஆண்டு தின ஆசிர்வாத வழிபாடுகள் விகாரைகளிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும், கோயில்களிலும் , மசூதிகளிலும் இனமத பேதங்களின்று ஒற்றுமையாக மேற்கொள்கின்றோம்.
நாங்கள் ஒரு ஐக்கிய தேசமாகவும் இலங்கையர்களாகவும் முன்னேற வேண்டும், ஏனென்றால் அதுதான் தங்கள் விருப்பத்தின் மதங்களைப் பின்பற்ற முழு சுதந்திரமும் உள்ளது. ஒரு சிறிய நாடாக நாம் இலங்கையர்களாக கைகோர்க்க வேண்டும், அப்போது தான் நம் இலக்குகளை அடைய முடியும்.
நாங்கள் ஒரு ஐக்கிய தேசமாகவும் இலங்கையர்களாகவும் முன்னேற வேண்டும், ஏனென்றால் அதுதான் நமது ஒற்றுமையையும் வலிமையையும் உருவாக்கும் என்று இராணுவத் தளபதி மேலும் கருத்து தெரிவித்தார்.

