கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 80 இற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
அத்துடன், குறித்த இருவரின் தொலைபேசி அழைப்பு உள்ளிட்ட விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவிடம் வழங்குமாறும் கொழும்பு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

