டிவிட்டர் நிறுவனம் தங்களது சமூக வலைதள செயல்பாடு உலகம் முழுதும் பல்வேறு இடங்களில் செயலிழந்ததாக அறிவித்தது.
செவ்வாய் அன்று டிவிட்டரின் சமூக வலைதள பக்கமும், மேலாண்மை தலமான டிவீட் டெக்கும் செயலிழந்ததாக கூறியுள்ளது. இதனால் சில பயனாளிகளுக்கு ட்வீட் செய்வது, அறிவிப்புக் குறிப்புகள் பெறுவது, நேரடி குறுஞ்செய்திகளை பெறுவதில் சிக்கல் இருக்கலாம் என்றும், அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதால் விரைவில் பழைய நிலை திரும்பும் என்றும் ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜப்பான், கனடா, இந்தியாவில் இருந்து ட்விட்டர் செயல்படவில்லை என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததாக செயலிழப்புகளை கண்காணிக்கும் அவுட்டேஜ் டாட் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விசாரித்து வருவதாக ட்விட்டர் கூறியுள்ளது. ட்வீட்டெக்கில் லாகின் செய்ய முயன்றால் அது ட்விட்டரின் வலைதளத்தை இணைப்பதாகவும் கூறப்படுகின்றது.

