வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு என்ன என்பதை ஐக்கிய தேசிய கட்சி ஒளிவு மறைவில்லாது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் ஆகியோருடனான சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தீர்வுப் பொதியைப் பொறுத்தே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா? இல்லையா? என்ற தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

