இன, மத பேதங்கள் கடந்து ஐக்கிய இலங்கையில் அனைத்தின மக்களுக்கும் சமநீதி கிடைக்கும் ஆட்சியை நிறுவுவேன் என ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனநாயகமா, சர்வாதிகாரமா வேண்டுமென்பதை மக்கள் தீர்ப்பின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும். எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அரசியல் அரங்கில் பல்வேறு எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் எல்பிட்டிய தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

