முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – சுதந்திரபுரம் பகுதியில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்தே நேற்று இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார், 8 கிளைமோர் குண்டுகள் 50 டெட்டனேட்டர் வகை வெடிப்பொருட்களை இனம் கண்டு அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அதனை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்.

