இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ், அவன்கார்ட் மெரிடைஸ் நிறுவனத்திற்கு எதிரான வழக்குத் தொடர்பாக இப்போது வருத்தமடைந்துள்ளதுடன், அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதியின் வணிகங்களை பாதிக்கும் என்பதை அறிந்திருந்தால், ஒருபோதும் அத்தகைய முடிவை எடுத்திருக்க மாட்டேன் என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
நிசங்க சேனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலிலே அவர் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
இதற்கு அரசியல் அழுத்தம் தான் காரணம் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.

