‘தேசிய மக்கள் சக்தியின்’ ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு தெரிவித்து ஹட்டனில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் ‘தேசிய மக்கள் சக்தி’ போட்டியிடவுள்ள சின்னம் குறித்த அறிவிப்பு அடுத்த வாரமளவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 வரையான காலப்பகுதியில் வேட்பு மனுக்கல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

