ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானம் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் கிடைக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் கட்சிக்குள் எந்த பிளவுகளும் முரண்பாடுகளும் இல்லாது கிடைக்கப் பெறும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியினதும் சிவில் அமைப்புகளினதும் முழுமையான ஆதரவு எனக்கு கிடைத்துள்ளது. அத்துடன், வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் முழுமையான ஆதரவையும் பெற்றுக்கொள்வேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

