சபாநாயகர் கரு ஜயசூரியவினால் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நியமிக்குமாறு கோரி எழுத்து மூலம் எந்தவொரு வேண்டுகோளும் முன்வைக்கப்படவில்லையென சபாநாயகரின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய பத்திரிகைகள் பலவற்றில் இது தொடர்பில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பை சபாநாயகரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு பல தரப்புக்களிலிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே கடந்த 17 ஆம் திகதி ஊடக அறிவித்தலொன்றை சபாநாயகர் வெளியிட்டிருந்தார் எனவும் அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அறிவிப்பின் ஊடாக தனது கொள்கைகள் பலவற்றையே சபாநாயகர் தெளிவுபடுத்தியிருந்ததாகவும் அதில் எந்தவொரு இடத்திலும் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரவில்லையெனவும் அவரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

