ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணி அளவில் முன்னிலையானார்.
அங்கு அவர் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியனார்.
மீண்டும் இன்று மதியம் 1.30 மணிக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாகவுள்ளார்.