பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்களை 6 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த ஒருவரின் சடலத்தை மத்துகம பிரதேச தோட்டமொன்றிலுள்ள மயானத்தில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி அடக்கம் செய்தமை தொடர்பில் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளை குறித்த வழக்கு டிசம்பர் மாதம் 10ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.