தாய் நாட்டை நேசிக்கும் முஸ்லிம், இந்து மற்றும் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தான் ஒருபோதும் செயற்படப் போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
100 ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக மத்திய அரசின் தலையீட்டால் முஸ்லிம் பள்ளிகள் கட்டப்படுகின்றது. தன்னிடம் பொய்யான விடயங்களை கூறும் பழக்கம் இல்லை. எந்தவொரு விடயம் குறித்தும் ஒருபோதும் பாசாங்கு செய்வதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குப் பிறகு புதிய இலங்கையை உருவாக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது. அப்போது இனவாதம், மதவாதம் மற்றும் பயங்கரவாதம் இல்லாத இலங்கை உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.