நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கே ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு இன்னும் கால இழுத்தடிப்பைச் செய்கின்றது என கோட்டாபய ராஜபக்ஸவின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்கு பல்வேறு உத்திகளைக் கையாள்கின்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டால் மக்களுக்கு சிறு பொருட்களை விநியோகிக்க முடியாது. இதனாலேயே வெற்று விண்ணப்பப்படிவங்களையும், சீமேந்து, கூரைத் தகடு போன்றவற்றையும் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கண்டியில் வைத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.