மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் பகுதியிலிருந்து சந்தேகத்திற்கு இடமான கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுவரும் வீதி அபிவிருத்திக்காக கொட்டப்பட்ட கிரவல் மண்ணிலிருந்தே குறித்த கைக்குண்டு நேற்று மீட்கப்பட்டுள்ளது.
அங்கு பணியில் ஈடுபட்ட ஊழியர்களே குறித்த கைக்குண்டு காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் காணப்பட்ட கைக்குண்டு அடையாளப்படுத்தப்பட்டதுடன், குறித்த பகுதிக்கு தற்காலிக பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.