மக்கள் விடுதலை முன்னணி என்பது ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்நாட்டில் கொண்டு செல்லப்படும் தூதரகங்கள் சிலவற்றினால் முன்னெடுத்துச் செல்லப்படும் ஒரு கட்சி எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேவையை நிறைவு செய்யும் விதத்திலேயே ஜே.வி.பி. செயற்பட்டு வருகிறது எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி தனது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதன் பிரதான நோக்கம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்காமல் போகும் வாக்குகளை பொதுஜன பெரமுனவுக்கு கிடைக்காமல் செய்வதற்கே ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

