காலிமுகத்திடல் வீதியின் கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டப்பகுதி மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட தேவையுடைய இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இணைந்து குறித்த பகுதியில் இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாகவே அந்த வீதி மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, குறித்த பகுதியை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

