மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பாக விஷேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – கிரான் சந்தியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பிலேயே இந்த விடயம் தொடர்பான தகவலை வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான ஒருநாள் விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றபோதும் அந்த பல்கலைக்கழகத்தின் உண்மை நிலவரத்தை எந்தவொரு உறுப்பினரும் வெளியிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பல்கலைக்கழகத்திலிருந்து முழு தென்னாசியாவிற்கே தேவையான குண்டுதாரிகள் உருவாக்கப்படுகின்றனரென்றும் இந்த பல்கலைக்கழகத்திற்கு சவூதி அரேபியாவில் உள்ள செல்வந்தர்களே நிதியுதவி வழங்கியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களே ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களை அடிப்படைவாதிகளாக மாற்றி நாசமாகியுள்ளதாகவும் பாகிஸ்தானுக்கும் அதே நிலவரம் என்பதோடு, இலங்கையிலும் அதேபோன்ற செயற்பாட்டையே அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விஷேட கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் மட்டக்களப்பு கிரான் சந்தியில் இடம்பெறவுள்ளதாக தெரிவித்த ரத்தன தேரர், இதன்போது, மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் சட்டவிரோத தன்மை தொடர்பாக தகவல் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

