அமைச்சரவைக் கூட்டத்தின் நேரத்தை மீண்டும் மாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய இனிவரும் நாட்களில் காலை 8.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்
முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் காலை 9.30 மணிக்கு நடத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய கடந்த இரண்டு வாரங்களாக காலை 7.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.
எனினும் அமைச்சர்கள் அந்த நேரத்துக்கு கூட்டத்திற்கு வருவதில் சிரமத்தை எதிர்நோக்குவதால், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

