மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.
அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ளது கைலாஷ் மானசரோவர். இங்கு இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில், மானசரோவர் செல்லும் யாத்ரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளதாக, சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் உடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இதனை அவர் தெரிவித்தார்.
எல்லையோர பகுதிகளில் கலாசார நிகழ்ச்சிகள் நடத்துவது, மருத்துவ முகாம்கள் அமைப்பது, திரைப்பட விழாக்கள் நடத்துவது, மானசரோவர் யாத்ரிகர்கள் செல்வதற்கு புதிய பாதையை திறந்து விடுவது உள்ளிட்டவை குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பின்போது பேசப்பட்டது.