பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஹோமாகமவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டுள்ளார்.
அனைவருக்கும் வீடு எனும் அரசாங்கத்தின் வீட்டுத் திட்டத்தின் கீழ் ஹோமாகம ஜல்தர ரணல பிரதேசத்தில் மத்திய தர வர்க்கத்தினருக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்விலேயே அவ்வாறு இருவரும் இணைந்து கலந்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு உக்கிரமடைந்துள்ள நிலையில் இரு தலைவர்களும் ஒரே மேடையில் சந்தித்துள்ளமை அரசியல் தரப்பில் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது.