Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சைவ சமய மறு­ம­லர்ச்­சிக்­கான நட­மாடும் சேவை முதலில் கொழும்பில்

August 9, 2019
in News, Politics, World
0

உங்கள் ஊர் தேடி வரும் இந்து–­சைவ மறு­ம­லர்ச்­சிக்­கான நட­மாடும் சேவை, முதற்­கட்­ட­மாக நாளை 10 ஆம் திகதி வட­கொழும்­பிலும், 17ஆம் திகதி தென் கொழும்­பிலும், 18ஆம் திகதி அவி­சா­வ­ளை­யிலும் நடை­பெறவுள்ளன. ஏனைய மாவட்­டங்­க­ளிலும் உட­ன­டி­யாக இந்த நட­மாடு சேவை நடத்­தப்­படும். இதில் இந்து குரு­மார்கள், அறங்­கா­வ­லர்கள், அற­நெறி ஆசி­ரி­யர்கள், இந்து மன்ற செயற்­பாட்­டா­ளர்கள் உள்­ளிட்ட அனை­வரும் கலந்­து­கொண்டு பயன்­பெற வேண்டும் என தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி-­, ஜ­ன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வரும், தேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்­பாடு, இந்து சமய விவ­கார அமைச்சர் மனோ கணேசன் கூறி­யுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,

எமது தேசிய ஒரு­மைப்­பாடு, அர­ச­க­ரும மொழிகள், சமூக மேம்­பாடு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்­சினால், “உதயம் – மக்கள் சேவை – உங்கள் ஊர் தேடி வரும் அரச சேவை” என்ற பெயரில் நடத்­தப்­படும் இந்த இந்­து–­சைவ மறு­ம­லர்ச்­சிக்­கான நட­மாடும் சேவை முதலில் கொழும்பு மாவட்­டத்தில் பின்­வரும் மூன்று இடங்­களில் அறி­விக்­கப்­பட்­டுள்ள திக­தி­களில் நடை­பெறவுள்ளன.

(1)கொழும்பு வடக்­குக்­கான முதலாம் சேவை, நாளை சனிக்­கி­ழமை மு.ப. 9.00 – பி.ப 4.00 மணி­வரை கொழும்பு வடக்கு – நாவலர் மண்­ட­பத்­தில் இடம்பெறும்

(2)கொழும்பு தெற்­குக்­கான இரண்டாம் சேவை எதிர்­வரும் 17ஆம் திக­தி சனிக்­கி­ழமை மு.ப. 9.00 – பி.ப 4.00 மணி­வரை கொழும்பு தெற்கு – சரஸ்­வதி மண்­ட­பத்­தில் இடம்பெறும்.

(3)அவி­சா­வ­ளைக்­கான மூன்றாம் சேவை, 18ஆம் திக­தி ஞாயிற்­றுக்­கி­ழமை மு.ப. 9.00 – பி.ப 4.00 மணி­வரை அவி­சா­வளை – புவக்­பிட்­டிய சீசீ தமிழ் வித்­தி­யா­ல­யத்­திலும் நடை­பெறவுள்ளன.

இதை­ய­டுத்து ஏனைய மாவட்­டங்­க­ளிலும் இந்த இந்­து–-­சைவ நட­மாடும் சேவை நடை­பெறும். இவற்­றுக்­கான திக­திகள் விரைவில் அறி­விக்­கப்­படும்.

இந்­ந­ட­மாடும் சேவையில் பெறக்­கூ­டிய சேவைகள்

• இலங்கை தேசிய இந்து மகா­சபை உரு­வாக்கம் பற்றி மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­துதல்.

• இந்து ஆல­யங்கள், இந்து நிறு­வ­னங்கள், இந்து அற­நெறிப் பாட­சா­லைகள், தமிழ் கலை­மன்­றங்கள் என்­ப­வற்றை பதிவு செய்தல்.

• இந்து ஆல­யங்கள், இந்து நிறு­வ­னங்கள், இந்து அற­நெறிப் பாட­சா­லைகள், தமிழ்க் கலை­மன்­றங்கள் என்­ப­வற்றின் தக­வல்­களை பெறு­தலும் மீள்­ப­திவு செய்­தலும்.

• இந்து ஆல­யங்கள், இந்து நிறு­வ­னங்கள், இந்து அற­நெறிப் பாட­சா­லைகள், தமிழ்க் கலை­மன்­றங்கள் என்­ப­வற்றின் நிர்­வாக நிதி நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக ஆலோ­சனை வழங்கல்.

• இந்து ஆல­யங்கள், இந்து நிறு­வ­னங்கள், இந்து அற­நெறிப் பாட­சா­லைகள் என்­பன எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள், பிணக்­கு­க­ளுக்குத் தீர்வு காணல்.

• இந்து அற­நெறிப் பாட­சா­லை­களின் கற்றல் கற்­பித்தல் நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக ஆலோ­சனை வழங்­குதல்.

• இந்து அற­நெறிப் பாட­சாலை ஆசி­ரி­யர்­களின் தக­வல்­களை பெறு­தலும் பதிவு செய்­தலும்.

• இந்து அற­நெறிப் பாட­சாலை ஆசி­ரி­யர்­க­ளுக்கு அடை­யாள அட்டை வழங்­குதல்.

• இந்து அற­நெறிப் பாட­சா­லை­க­ளுக்கு புதி­தாக ஆசி­ரி­யர்­களை இணைத்துக் கொள்ளல்.

• இந்து குரு­மார்­களின் தக­வல்­களை பெறு­தலும் பதிவு செய்­தலும்.

• இந்து குரு­மார்­க­ளுக்கு அடை­யாள அட்டை வழங்­குதல்.

• தமிழ் கலை­ஞர்­களின் தக­வல்­களை பெறு­தலும் பதிவு செய்­தலும்.

இவை பற்­றிய மேல­திக விப­ரங்­க­ளுக்கு: பணிப்பாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, 248 1/1, காலி வீதி, கொழும்பு-4 என்ற விலாசத்தில் அமைந்துள்ள அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இல. 011 2552641.

Previous Post

மஹிந்த பக்கம் தாவும் மற்­றொரு அணி

Next Post

நாடாளுமன்றத்துக்குள் குழந்தையுடன் வந்த பெண் எம்.பியை வெளியேற்றிய சபாநாயகர்

Next Post

நாடாளுமன்றத்துக்குள் குழந்தையுடன் வந்த பெண் எம்.பியை வெளியேற்றிய சபாநாயகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures