மாகாண சபைத் தேர்தலே முதலில் நடாத்தப்பட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மாகாண சபைத் தேர்தலை முதலில் நடாத்த வேண்டும் என்றே நாம் கோருகின்றோம்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து எல்லை நிர்ணய அறிக்கைக்கு அனுமதியைப் பெற்று அதற்கு தகுதியானவர்களை நியமித்து விரைவில் தேர்தலை நடாத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.