அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்த சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் சம்பந்தப்பட்ட அதே அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமரின் இந்தக் கோரிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்கவினால் கடந்த 23 ஆம் திகதி எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுதவிர, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவுக்கு கால்நடைகள் அமைச்சை வழங்குமாறும் அக்கடிதத்தில் பிரதமர் கோரியுள்ளார்.