கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 201 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.
அதன்படி குறித்த தினத்திலிருந்து இதுவரை மதுபோதையில் வாகனம் செலுத்திய 5042 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.