நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் தொடர்பில் அடுத்து வரும் மூன்று வாரங்களுக்குள் ஐக்கிய தேசிய முன்னணியினால் நற்செய்தியொன்று வழங்கப்படும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
புதிய எதிர்பார்ப்புக்களுடன் புதிய அரசாங்கமொன்றை தாம் அமைக்கவுள்ளதாகவும், கடந்த காலத்தில் காணப்பட்ட அரசர்கள், இளவரசர்கள், ராணிகளுக்கு ஆகியோருக்கு எதிர்வரும் காலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர இடமளிக்கப் போவதில்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

