3 தனியார் கட்டுமான நிறுவனங்களின் பணிப்பாளராக உள்ள கிதேர் மொஹமட் சஹப்தீன் ஆயிசா என்ற பெண்ணின், தனியார் வங்கி கணக்கின் ஊடாக இடம்பெற்ற ஐந்து கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுமதியான நிதி பறிமாற்றம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிதிமோசடி விசாரணைப் பிரிவு இந்த விசாரணைகளை மேற்கொள்கிறது.
இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைய இந்த விசாரணை இடம்பெறுவதாக, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வைத்து, நிதிமோசடி விசாரணைப் பிரிவு நேற்று தெரிவித்தது.
கொழும்பு 7, பௌத்தலோக மாவத்தையைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு உரிய வங்கி கணக்கிற்கு, தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து ஐந்து கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை வைப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

