இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துகளில் எண்பது வீதமானவை போதையில் வாகனங்களை செலுத்துவதால் ஏற்படுகின்றதென கோறளைப்பற்று மத்தி. சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ரி.நஜீப்கான் தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “போதையில் வாகனங்களை செலுத்துவதே இலங்கையில் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதற்கான காரணமாக அமைகின்றது.
போதையில் வாகனத்தை செலுத்தும்போது முன்னால் வரும் வாகனத்தில் தூரத்தினை சரியாக கணிக்க முடியாமல் விபத்துக்கள் இடம்பெறுகின்றன” என மேலும் தெரிவித்தார்.