நேற்று (27) நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இன்று நள்ளிரவு வரை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையின் காரணமாக போராட்டத்தில் ஈடுபடுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதனை முறையாக நடைமுறைப்படுத்து ஒருமாத கால அவகாசம் தேவை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
அதேவேளை புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்யும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வௌியிடப்பட்டுள்ளது.
அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்த பின்னர் வேலை நிறுத்தம் செய்யும் புகையிரத ஊழியர்களுக்கு எதிராக அவசர கால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.