Tuesday, September 16, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உலகக்கோப்பை தொடரில் இருந்து தவான் விலகல்: ரிஷப் பந்துக்கு வாய்ப்பு

June 19, 2019
in News, Politics, Sports, World
0

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம்பிடித்திருந்தார். கடந்த 9-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் தவான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் இந்தியா 352 ரன்கள் குவித்ததோடு, 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டியின்போது தவானின் பெருவிரலில் ஹேர்லைன் அளவிற்கு எழும்பு முறிவு ஏற்பட்டது. இந்தக் காயம் குணமடைய மூன்று வாரங்கள் ஆகும் என இந்திய அணியின் டாக்டர் குழு மதிப்பிட்டிருந்தனர். மூன்று வாரம் என்பதால் ஜூலை 1-ந்தேதிக்குள் உடற்தகுதி பெற்று விடுவார். அதுவரை லோகேஷ் ராகுலை தொடக்க வீரராக களம் இறக்கிக் கொள்ளலாம் என நிர்வாகம் முடிவு செய்தது.

தவான் காயம் குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘தவான் உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு மிகவும் ஆவலாக உள்ளார். அவரது காயம் குணமடைந்து விடும். அரையிறுதிக்குள் தயாராகி விடுவார்’’ என்று கூறியிருந்தார்.இந்நிலையில் அவரது காயம் குணமடைய மேலும் சில வாரங்கள் ஆகும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து அவர் விலகியுள்ளார்.இதுகுறித்து பிசிசிஐ ‘‘தவான் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ரிஷப் பந்தை அணியில் சேர்க்க அனுமதியளிக்க வேண்டும்’’ என்று ஐசிசிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் தவானில் 2019 உலகக்கோப்பை கனவு இரண்டு போட்டிகளுடன் முடிவுக்கு வந்துள்ளது.

Previous Post

ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி மன்னருக்கு தொடர்பு

Next Post

தெருவில் சென்றவர்களை முட்டித்தள்ளும் காளை

Next Post

தெருவில் சென்றவர்களை முட்டித்தள்ளும் காளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures