Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

2 மணிக்கு முன்னர் தீர்வு கிடைக்காவிடின் உலகமே வியக்கும் வியப்பான செய்தி

June 19, 2019
in News, Politics, World
0

இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் தீர்வு கிடைக்கவில்லையாயின் உலகமே வியக்கும் வியப்பான செய்தியைத் தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாகக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் காலை முதல் பிரதேச செயலகத்தின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, ஹிந்து மத பூசகர்கள், தேவாலய பாதிரியார்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டு. இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த போராட்டத்தில் பிரதேச சமூக நல அமைப்புக்களின் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். நெறைய தினம் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் ஆதரவாக களமிறங்கியிருந்தனர்.

போராட்டகார்கள் தாம் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும், தங்கள் விடயத்தில் அரசாங்கம் பொடுபோக்காக இருப்பதாகவும் உடனடியாக இந்த விடயத்தைக் கவனத்தில்கொண்டு தீர்வு காணும் விதமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாலை அம்பாறை அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் , கல்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திரு.அதிசயராஜ் ஆகியோருடன் பிரதேசத்தினுக்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்துகொண்டு உண்ணாவிரத போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்கள்.

அரச உயரதிகாரிகளுக்குப் பதிலளித்த போராட்டக்காரர்கள் நாங்கள் இனவாத குழப்பங்களை உருவாக்க இங்குப் பட்டினியுடன் அமரவில்லை. இந்த நல்லாட்சி எங்களை ஏமாற்றி விட்டது. சகல வளமும் மிக்க செயலகமாக இந்த செயலகத்தை தரமுயர்த்தி தர வேண்டும். அதுவரை நாங்கள் எங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம். அரச வர்த்தமானி வரும் வரை காத்திருக்கிறோம். எங்கள் மக்களுக்கு அரசு அவர்களின் உரிமைகளைத் தர முன்வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர்.

தொலைப்பேசி மூலம் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றும் அவை பலனளிக்கவில்லை. தொடர்ந்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Previous Post

வெலிகந்த பகுதியில் கோர விபத்து – 4 பெண்கள் உட்பட ஐவர் பலி

Next Post

மரம் வெட்டும் இயந்திரங்களை இறக்குமதி செய்யத் தடை

Next Post

மரம் வெட்டும் இயந்திரங்களை இறக்குமதி செய்யத் தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures