புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் நேற்று முதல் பதவியேற்று வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், பாஜக எம்.பி.க்கள், ராகுல், சோனியா, ஜெகன் கட்சி எம்.பி.க்கள் என பலரும் நேற்று பதவியேற்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து தேர்வான் எம்.பி.க்கள் இன்று பதவியேற்க உள்ளனர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே பதவி ஏற்க வேண்டுமென ஏற்கனவே பலரும் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்றுக் கொண்டு தமிழிலேயே தமிழக எம்.பி.க்கள் பதவியேற்போம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்