முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ போன்ற ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று கண்டியில் நடைபெற்ற பொசன் நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:
தற்பொழுது கிடைத்த மிகவும் மகிழ்ச்சியான செய்தி, எதிர்காலத்தில் ஜனாதிபதியாக்குவர் என எமது சமல் ராஜபக்ஷ அவர்கள். இதை உண்மையிலேயே நாம் அறிந்திருக்கவில்லை. நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை நாடு நாசமடைந்ததற்கு ஐக்கிய தேசிய கட்சியே பொறுப்புக் கூறவேண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.