பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிலிருந்து வருகைதந்த ஷங்காய்-ஹொங்கொங் பௌத்த தூதுக் குழுவை சந்தித்தார்.
சீனத் தூதுக்குழுவில், சீனாவின் ஹுனான் மாகாணத்தின் துணைத்தலைவர் வென்மிங்சன், ஹொங்கொங்கிலுள்ள சீன பௌத்த பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சூ யூ உட்பட்ட குழுவினர் பிரதமருடனான சந்திப்பில் ஈடுபட்டனர்.
நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், கோட்டை ஸ்ரீ கல்யாணி சாகிரீத் தர்ம மகா சங்க சபையின் முதன்மை சங்க நாயக்கர் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, ரத்மலானையில் சீன-இலங்கை நட்புறவு புத்த கல்வி நிறுவனத்தை நிறுவுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், துறவிகளுக்கான பௌத்த மத கல்வி பற்றிய ஆண்டு மாநாட்டை நடத்துவது குறித்தும் உரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.