ஆஸ்ரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த தொடக்க வீரர் தவானுக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக அவரால் மூன்று வாரங்களுக்கு விளையாட முடியாது. 2 முதல் 3 போட்டிகள் வரை அவர் ஆடமாட்டார்.
ஆனாலும் தவானுக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே ரிஷப்பந்தை இங்கிலாந்து வருமாறு அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். மான்செஸ்டர் சென்று அவர் இந்திய அணியோடு இணைந்து கொண்டார்.

