தஜிகிஸ்தானில் இடம்பெறவுள்ள மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.
ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த 5வது மாநாடு இன்று ஆரம்பமாகிறது.
தஜிகிஸ்தானின் துஷன்பே மாநாட்டு மண்டபத்தில் இன்று இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஆசிய நாடுகளின் பல அரச தலைவர்கள் துஷன்பே நகருக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், அதன் பின்னர் மாநாட்டில் பங்குபற்றும் சில அரச தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

