போர் இடம்பெற்று பத்துவருடங்கள் கடந்த நிலையில் – போரால் பாதிக்கப்பட்டு ,வலுவிழந்து ,அங்கவீனமாகி இருக்கும் மக்களுடைய அவலங்களை பேசுவதோடு ,அவர்கள் மத்தியில் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து மீண்டெழுந்து சாதனை படைத்தவர்களும் ,அவர்களோடு கூட பயணிப்போரும் இணைந்து – “பாதிக்கப்பட்டோர் பதின்மம் கடந்தும்…” எனும் தொனிப்பொருளில் பிரமாண்ட மாநாடு நேற்று இடம்பெற்றது .
இந்த மாநாட்டில் போர் இடம்பெற்ற வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து சுமார் எண்பதிற்க்கும் மேற்ப்பட்ட அமைப்புக்கள் ,ஐந்து மாவட்டங்களின் மாவட்ட செயலர்கள் ,பிரதிநிதிகள் ,மனித உரிமை அமைப்பினர் ,சமூக சேவை பணிப்பாளர்கள் ,பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் உட்பட முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர் .
மாநாட்டின் முடிவில் அனைத்து வகையான பாதிப்புகளையும் உடையவர்கள் ஒவ்வொரு குழுவாக கூடி மாபெரும் பிரகடனங்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது .


