Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை இராணுவ தளபதி – இந்திய இராணுவ உயரதிகாரிகள் சந்திப்பு

June 13, 2019
in News, Politics, World
0

இந்திய இராணுவ உயரதிகாரிகள் ‘Army-to-Army Staff Talks’ (AAST) எனும் தலைப்பில் ஐவரை உள்ளடக்கிய குழுவினர்கள் மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் இராணுவ தளபதியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் இந்திய இராணுவ உயரதிகாரிகளான மேஜர் ஜெனரல் சுசிந்ரா குமார், கேர்ணல் நிஷ்சிட் ரஞ்சன், லெப்டினன்ட் கேர்ணல் சிறிநாத் சந்திப்பா ரெட்டி, இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதினாரிகளான கெப்டன் அசோக் ரேவ், லெப்டினன்ட் கேர்ணல் ரவி மிஷ்ரா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இராணுவ தளபதி அவர்கள் இந்திய இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் சுசீந்திர குமார் உட்பட ஏனைய அதிகாரிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் இந்தியாவில் இளம் இராணுவ அதிகாரிகளுக்கான பாடநெறி பயிற்சிகளுக்கு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதை முன்னிட்டு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அத்துடன் இந்தியாவில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு விளையாட்டு துறையை மேம்படுத்துவது, உளவுத்துறை, சிமுலேட்டர் அமைப்புகள், குறுகிய ஆயுதம் போன்ற பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குமாறு இராணுவ தளபதி இந்த இந்திய உயரதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

இராணுவ தளபதியின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க மேஜர் ஜெனரல் சுசீந்திர குமார் அவர்கள் இந்திய இராணுவத்தின் தொடர்ச்சியான பயிற்சி வாய்ப்புகள் இலங்கை இராணுவத்திற்கு வழங்குவதாக இராணுவ தளபதிக்கு உறுதியளித்தார். அத்துடன் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல், வலயத்தின் பாதுகாப்பு நிலைபேறான தன்மை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இராணுவ தளபதியுடன் கலந்துரையாடினார்.
கடந்த (11), இராணுவ தலைமையக கலந்துரையாடல் மண்டபத்தில் ஏஏஎஸ் அமர்வுகள் இடம்பெற்றன. இதன் போது பயிற்சி மாதிரிகள், உள்கட்டமைப்பு முன்னேற்றம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் நலத்திட்டங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இராணுவத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களுடனும் இந்திய இராணுவத்தின் மூத்த உயரதிகாரியான மேஜர் ஜெனரல் சுசீந்திர குமார் அவர்கள் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இதன் போது சாத்தியமான விளையாட்டு பரிமாற்ற திட்டங்கள் இ பயிற்றுவிப்பாளர்களுக்கு பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட மூலோபாய அணுகுமுறைகளை உள்ளடக்கிய எதிர்கால பயிற்சி தொகுதிகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த இந்திய உயரதிகாரிகளின் சந்திப்பின் போது இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவபடுத்தி இராணுவ பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன, இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா, இராணுவ விளையாட்டு துறை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அருண சுதசிங்க, இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா, காலாட் பணியகத்தின் பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் தேசபிரிய குணவர்தன, இராணுவ பயிற்சி பணியகத்தைச் சேர்ந்த கேர்ணல் கே.ஏ.என் ரஷிக குமார, இராணுவ செயலகத்தைச் சேர்ந்த கேர்ணல் பி.கே.எஸ் நந்தன போன்றோர் இணைந்து கொண்டனர் 2012 ஆம் ஆண்டு புது தில்லியில் இராணுவ தள பணிக்கான பேச்சுவார்த்தைகளில் இந்திய-இலங்கை இராணுவம் (ஆர்எஸ்எஸ்) இரு படைகளுக்குமிடையே நல்ல உறவை வளர்ப்பதற்கான வெளிப்படையான நோக்கத்துடன் இடம்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளுடன் இந்திய இராணுவம் இதே போன்ற கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Previous Post

ஹிஸ்புல்லாவை கைது செய்யுங்கள் களத்தில் குதித்த தேரர்!!

Next Post

தெரிவுக்குழுவில் ஆஜராகிறார் ஹிஸ்புல்லாஹ்

Next Post

தெரிவுக்குழுவில் ஆஜராகிறார் ஹிஸ்புல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures