பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை ஒரு வார தாமதத்துக்கு பின் கேரளாவில் நேற்று துவங்கியது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் தேதியில் கேரளாவில் துவங்கும். இந்தாண்டு ஒரு சில நாட்கள் தாமதமானாலும் முதல் வாரத்திலேயே மழை பெய்யத் துவங்கி விடும் என கூறப்பட்டது.இதற்கு ஏற்ப அந்தமான் கடல் பகுதிகளில் மே 19ம் தேதியே மழை பெய்யத் துவங்கியது. ஆனாலும் கேரளாவில் மழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.ஒரு வார தாமதத்துக்கு பின் கேரள மாநில கடலோர பகுதிகளில் நேற்று மழை பெய்யத் துவங்கியது. பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாமதத்துக்கு பின் மழை துவங்கியுள்ளதால் ‘சராசரியை விட குறைவான மழையே பெய்யுமோ’ என விவசாயிகளிடையே கவலை ஏற்பட்டுள்ளது.ஆனாலும் ‘பருவமழை அளவு சராசரியை ஒட்டியே இருக்கும்’ என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

