முச்சக்கர வண்டியொன்றில் 2 கோடி 30 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருள் கடத்திய நபர் ஒருவரை ஒருகொடவத்தை மேம்பாலத்துக்கு அருகில் வைத்து வெல்லவத்தை பகுதி ஊழல் ஒழிப்பு பிரிவு கைது செய்துள்ளது.
இவரிடமிருந்து 2 கிலோவும் 221 கிராம் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் அங்கொட கொடிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.