தீவிரவாதி சஹ்ரானுக்கு உதவி செய்த களுத்துறை, மீககதென்ன ஷான்த ஹேம குமார பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 கிரிஸ்தவ தேவாலயம் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொண்டு 257 மனித உயிர்களை கொன்ற தீவிரவாதி சஹ்ரானுக்கு கிடைத்த வெளிநாட்டு கறுப்புப்பணத்தினை வெள்ளைப்பணமாக மாற்றுவதற்காக பெரிதும் உதவியாக இருந்த தொழில் அதிபர் ஷான்த ஹேமகுமார என்பவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெளத்தராக இருந்த போதிலும் தீவிரவாத சஹ்ரானின் கும்பலுக்கு உறுதுணையாக இருந்ததாக புலனாய்வு பிரிவினரால் ஊர்ஜிதம் செய்ததன் பின்பு மே மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, தற்பொழுது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியக் கிடைத்துள்ளது.