Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுன்னாகம் பிரதேசசபைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

May 6, 2019
in News, Politics, World
0

யாழ்.சுன்னாகம் பிரதேசசபையில் குண்டுவைக்க உள்ளதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், சபையில் இடம்பெறவிருந்த கூட்டம் நிறுத்தப்பட்டு விசேட அதிரடிப்படையினா் மற்றும் பொலிஸாா், இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பிரதேசசபைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, உடுவில் பிரதேசசபையில் அபிவிருத்தி தொடா்பாக விசேட கூட்டம் ஒன்று சபையில் இடம்பெற்ற ஏற்பாடாகியிருந்தது. இந்நிலையில் பிரதேசசபையின் பொதுமக்கள் தொடா்பு அலுவலருக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்த மா்மநபா் ஒருவா்

கூட்டம் நடைபெற்றால் சபைக்குள் குண்டு வெடிக்கும் என அச்சுறுத்தியுள்ளாா். இதனையடுத்து பிரதேசசபையினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் பொலிஸாா், விசேட அதிரடிப்படையினா் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டிருப்பதுடன் பிரதேசசபைக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட மா்ம நபா் தொடா்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Previous Post

சஹ்ரானின் வாகன சாரதியின் நெருங்கிய சகா வாழைச்சேனையில் சிக்கினார்

Next Post

ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Next Post

ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures