Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் உயிரிழப்பு

May 6, 2019
in News, Politics, World
0

புத்தளத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிலாபம், முகுனுவட்டன பிரதேசத்தைச் சேர்ந்த அஜித் பிரசன்ன (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாரவில நகரத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் நேற்று இரவு ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அப்பகுதிக்கு வந்திருந்த குறித்த இளைஞனை பொலிஸார் சோதனையிட்டபோது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து இளைஞனை நோக்கி மாரவில பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சம்பவத்தில் காயமடைந்த இளைஞனை மாரவில வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சம்பத்தினால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

உச்ச கட்ட பாதுகாப்பில் நாடாளுமன்றம்!

Next Post

நீர்கொழும்பில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

Next Post

நீர்கொழும்பில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures