Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எஜமானர் ஏவினால் பறந்து வந்து தாக்கும் கிளி

May 5, 2019
in News, Politics, World
0

சிறுமி அபாயக்குரல் எழுப்பினால் தாக்குதல் நடத்தும் செல்லப்பிராணி பஞ்சவர்ணக்கிளி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

லார்டு ஃப்ளோக்கோ என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 4 விநாடிகளே கொண்ட வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் தனது சகோதரரின் மகளையும், அவள் வளர்க்கும் செல்லப்பிராணியின் செயலையும் குறிக்கும் விதமாக அமைந்திருந்தது. இதுவரை அந்த வீடியோவை சுமார் 23.9 மில்லியன் மக்கள் கண்டு வியந்துள்ளனர்.

உலகில் பலரும் பல நோக்கத்திற்காக செல்லப் பிராணிகளை ஆர்வமுடன் வளர்த்து வருகின்றனர். இங்கு கொஞ்சம் வித்தியாசமாக ஒரு சிறுமி தான் வளர்க்கும் செல்லப்பிராணிக்கு பயிற்சி அளித்துள்ள விதம் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அந்தச் சிறுமி கத்தினால் அருகே இருப்பவரை தாக்கும் அளவிற்கு பஞ்சவர்ணக்கிளிக்கு பயிற்சி கொடுத்துள்ளார். சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்ற வசனமே அனைவருக்கும் ஞாபகம் வரும். ஆனால் இந்த வீடியோவை பார்க்கும் போது கத்தினால் தாக்கும் கிளியே நம் அனைவருக்கும் நினைவில் வரும்.

திரைப்படங்களில், சர்க்கஸ்களில் மட்டுமே சாகசங்களை செய்யும் கிளிகளுக்கு மத்தியில், இந்தக் கிளி கொஞ்சம் வித்தியாசமாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

Previous Post

சர்ச்சைக்குரிய 20 சீ.டீக்களுடன் மேலும் 2 பேர் கைது

Next Post

தற்கொலைக் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு சீனா நிதியுதவி

Next Post

தற்கொலைக் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு சீனா நிதியுதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures