Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தீப்பிடிக்கும் அரங்குகள் : கவலையில் பட உலகம்

May 4, 2019
in Cinema
0

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன், நயன்தாரா, தமன்னா, கெஜபதி பாபு, சுதீப் உள்ளிட்ட பலர் நடிக்கும் தெலுங்கு படம் சயீரா நரசிம்ம ரெட்டி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெகு காலமாக நடந்து வருகிறது. ஆனால், இன்னும் முடியவில்லை. ராம் சரண் தயாரிப்பில் உருவாகிறது.

இந்தப் படத்தின் படபிடிப்புக்காக, ஆந்திராவில் சிரஞ்சீவிக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று, கோக்காபேட்டையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு, நடந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், சிரஞ்சீவி வெளிநாடு போக வேண்டியிருந்ததால், படபிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால், செட் அப்படியே இருந்தது.

அவர் திரும்ப படபிடிப்பைத் துவங்கலாம் என சொன்னதும், துவங்கலாம் என முடிவெடுத்தனர் படத் தயாரிப்புக் குழுவினர். அந்த செட்டில் திடீரென தீப்பிடித்தது. அருகில் இருந்த தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, தீயை அணைத்தனர். இது தொடர்பாக, ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தளபதி 63 படத்துக்காக, சென்னை, விமான நிலையம் அருகில் இருக்கும் பின்னி மில்லுங்குச் சொந்தமான இடத்தில், செட் போடப்பட்டு, நடிகர் விஜய் நடிக்க படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், அங்கு போடப்பட்டிருந்த பிரமாண்ட செட் தீப்பிடித்தது.

இப்படி வரிசையாக செட்கள் தீபிடிப்பது, பட உலகை பதற்றம் கொள்ள வைத்திருக்கிறது.

Previous Post

பெண் குழந்தைக்கு தாயான பிறகு நியூசிலாந்து பிரதமருக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்

Next Post

ஆபாச பார்முலாவிலிருந்து விலகிய இயக்குநர்

Next Post

ஆபாச பார்முலாவிலிருந்து விலகிய இயக்குநர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures